ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

ஒக்டோபர் 25, 2017

 எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் தமிழீழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும்  எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். 

எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது.

சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றிக்கொண்டுஇருக்கின்றது . 69 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது .

2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில்முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா ?

இன்று ஏழு  ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விடஅதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.
உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்ற,சர்வதேச மனித உரிமைகள் மீறப்பட்ட பாங்கு,மனிதாபிமான சட்டங்கள் உதாசீனம் செய்யப்பட்டமை,தமிழினப்படுகொலைஆவணங்கள் வெளிவரும் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும் .

இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுட்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும் . 

ஒரு தனிமனிதனால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் குறிகிய காலத்தில் தேசிய மக்கள் போராட்டமாக மாறியது. அதே போல் இன்றைய காலத்திலும் பல்வேறு காரணத்தால் மக்கள் பங்களிப்பு அதிகமாக இல்லை என்றாலும் எமது போராட்டம் விரிவடைந்து மிக விரைவில் மக்கள் போராட்டமாக வலுவாகும் காலம் விரைவாகும்.

நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் ,மக்களும். சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது .

இன்று எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வகையில்  எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும்.  

ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்றம் Allée du Printemps, 67000 Strasbourg  முன்பாக 25.10.2017 புதன் கிழமை பிற்பகல் 15.45 மணித்தொடக்கம் 17.00 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.  

நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.

நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .
ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம்.
ஸ்ராஸ்பூர்க்.
பிரான்ஸ் .

செய்திகள்
ஞாயிறு January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.

வியாழன் January 04, 2018

இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே  ரூபவாகினி செயற்பட்டது