ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய 13வது வருட விளையாட்டுப் போட்டி!

Sunday June 24, 2018

 ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய 13ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி கடந்த 23.06.2018அன்று சனிக்கிழமை காலை 9.45மணியளவில் ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள ROTOND விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

இந்த விளையாட்டுப்போட்டிக்கு கௌரவ விருந்தினர்களான ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச் சோலை ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர். விளையாட்டுப் போட்டி நிகழ்வு மங்களவிளக்கேற்றி, ஒலிம்பிக் சுடர் ஏற்றி, அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டுப்போட்டி ஆரம்பமாகியிருந்தது. ஓட்டம், தடைஓட்டம், தேசிக்காய் ஓட்டம், பழம் பொறுக்கல், கிளித்தட்டு, துடுப்பெடுத்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் அவரவர் வயதெல்லைக்கு ஏற்ப நடைபெற்றிருந்தது.

மழலைகள் பிரிவில் இருந்து விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். போட்டியிலே கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இறுதியில் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன், இவ் விளையாட்டுப் போட்டி இனிதே நிறைவுக்கு வந்தது.