ஸ்ரீதேவி மரணம்: விடை தெரியாத 3 கேள்விகள்!

Tuesday February 27, 2018

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து தான் என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கும் நிலையில், ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக விடை தெரியாத 3 கேள்விகளும் எழுந்துள்ளன.

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

அவருடைய மரணம் தொடர்பாக 3 மிகப் பெரிய கேள்விகள் எழுந்துள்ளன.

* போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் காவல் துறைக்கு  அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம்?...

* போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை?...

* ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்?

விடை காணமுடியாத கேள்விகளாக இவை உள்ளன.