ஹிட்லரின் சித்திரவதைகளுக்காக மன்னிப்புக் கேட்டார் ஜேர்மன் ஜனாதிபதி

Monday June 04, 2018

சர்வாதிகாரி ஹிட்லர் காலத்தில் ஜேர்மனியில் ஓரினச் செய்கையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் கொடுமைகளுக்காக தற்போதைய ஜேர்மன் ஜனாதிபதி ப்ராங் ஸ்டெய்ன்மெயர் மன்னிப்புக் கேட்டிருக்கின்றார். 

ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரிணச்சேர்க்கை கடும் குற்றமாக கருதப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குறிப்பாக இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் பலர் தேடித்தேடி கொல்லப்பட்டனர்.

இந்நிலையில்  ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த தவறுகளுக்கு தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

'அப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்' என அவர் தெரிவித்துள்ளார்.