ஹீரோயினாக திகழும் ஷாலினி

சனி பெப்ரவரி 06, 2016

நடிகை ஷாலினி தன்னுடைய சிறு வயதில்ருந்து 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஹீரோயினாக ஷாலினி நடித்தது தமிழ், மலையாளத்தில் சேர்த்து 15 படங்களுக்கும் குறைவுதான. காரணம் அவர் தன் கேரக்டர்களை மிக நேர்த்தியாக தேர்வு செய்தார்.

இளம் வயதில் விஜய்க்கு ஜோடியாக நடித்து காதலுக்கு மரியாதையை செலுத்தி, அமர்க்களம் படத்தில் அஜித்தை அமர்க்களமாக நிஜ வாழ்கையில் கரம் பிடித்தவர் ஷாலினி . இத்தனைக்கும் அமர்க்களம் படத்தில் நடிக்கும் போதே படு பிஸியான நாயகியாக இருந்தவர் ஷாலினி. தீடிரென்று அஜித்தை கல்யாணம் செய்து குடும்பத் தலைவியாக மாறியுது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

ஒரு பிசியான நடிகையாக இருக்கும்போது எல்லாப் புகழையும் தூக்கி எறிந்து விட்டு இல்வாழ்க்கைக்கு திரும்புவது என்பது எல்லோராலும் முடியாது.கிட்டத்தட்ட 15 வருட இல்வாழ்க்கையில் ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் இன்று வரை வெற்றிகரமாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் ஒரு சூப்பர் ஸ்டாருக்கு மனைவியாக இருக்கிறார் .

சாதாரண துணைநடிகரின் மனைவியே செம்ம பில்டப் கொடுக்கும் காலத்தில் இன்று சூப்பர் ஸ்டாராக திகழும் அஜித்தின் மனைவி என்ற ஒரு பந்தா கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. தன்னை ஒரு சாதாரண பெண்ணாக கருதிக் கொண்டு வாழ்வதுதான் அவரை நிஜ வாழ்வில் ஹீரோயினாக உயர்த்திக் காட்டுகிறது என்பதே ஒரு ஸ்பெஷலான விஷயம் அல்லவா !