ஹீலர் பாஸ்கர் கைது!

வியாழன் ஓகஸ்ட் 02, 2018

வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள பயிற்சி அளிக்க முகாம் நடப்பதாக விளம்பரம் செய்த நிஷ்டை என்ற அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கர் இன்று காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் திருப்பூரில் யுடியூ  காணொளி பார்த்து வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொண்ட பெண் பலியானார். இதனை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள கோவையில் இலவச பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இணையதளத்தில் ஒரு சுவராட்டி  உலா வந்தது.

இதனை அடுத்து, சுகாதாரத்துறைக்கு புகார் சென்றதை அடுத்து இந்த முகாம் நடத்தப்படுவது தடுக்கப்பட்டது. மேலும், இந்த முகாமை நடத்தும்  நிஷ்டை என்ற அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் காவல் துறையினர்   இன்று கைது செய்தனர்.