ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்னென்ன பாதிப்புகள்?

March 03, 2017

*நிலத்தில் 6000 அடிக்கு கீழ் போர்வெல் மூலம் நிலக்கரி அடுக்குகளுக்கு  அடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் இந்த ரசாயனத்தால் அடியோடு பாதிக்கப்படும்; வறட்சி  தலைவிரித்தாடும்; ஒட்டுமொத்தமாக பாலைவனமாக மாறிவிடும்.

*பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் முழுவதும் வெளியேற்றப்படும். விவசாயத்திற்கு ஒரு சொட்டு நீிர் கூட கிடைக்காது;  உணவுப்பொருள் விளைச்சல்  என்பது கேள்விக் குறியாகும்;  செடி கொடிகள், மரம் பூண்டோடு  அழிந்து போகும்; நோய்களால், வறட்சியால் கால்நடைகள் இனமே மறைந்து விடும்.

*ஹைட்ரோகார்பன்  நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதனால் பல்வேறு நோய்கள் பரவும்; அதிகபட்சமாக புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

*ரசாயன பாதிப்புகளால் படிப்படியாக உடலில் பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில், சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் 

*நெல், வாழை, பலா, மிளகு, கரும்பு, தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாயங்கள்  செழிப்பாக நடந்து வருகிறது.  ஆனால், எதிர்காலத்தில் இவை வெறும் கற்பனையாகி  விடும். 

*இப்போதே, மக்களுக்கும், அங்கு வேலை செய்வோருக்கும் உள்ளங்கைகளில் வெடிப்பு, தோல் உரிதல்,  சுவாசக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவர்கள் எந்த  வேலைக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். 

*காவிரி பாசன மாவட்டங்களை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைத்து பெருமிதப்படுகிறோம். அந்த பெருமை மறைந்தே போகும்.

செய்திகள்
வெள்ளி June 01, 2018

நான்தான்பா ரஜினிகாந்த் என்ற ஹாஷ்ராக் ரெண்ட் முதல் ...போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற சீற்றங்கள் வரை நானாவித செய்திகள் கிட்டும் பின்னணியில் மீண்டும் ஒரு நாள்!

வெள்ளி June 01, 2018

மட்டு - அம்பாறை மாவட்டத்தின் எல்லை பகுதியில் வயல்காணிகளிலும் மேட்டுநிலக் காணிகளிலும் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்...