‘தமிழீழத்திற்காக வாதிடும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ – முன்னாள் பிரித்தானிய அமைச்சர் சேர் எட் டேவி!

May 18, 2018

தமிழீழத்திற்காக வாதிடும் தமிழர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரித்தானிய எரிசக்தி மற்றும் காலநிலை மாற்ற விவகார அமைச்சர் சேர் எட் டேவி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இன்று இலண்டனில் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய சேர் எட் டேவி, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி கிட்டும் வரை தன்னைப் போன்ற பிரித்தானிய அரசியல்வாதிகள் ஓயப் போவதில்லை என்று சூளுரைத்துள்ளார்.

பிரித்தானியாவின் இரண்டாவது எதிர்க்கட்சியும், மூன்றாவது மிகப்பெரும் அரசியல் கட்சியுமான லிபரல் டெமக்கிராட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சேர் எட் டேவி அவர்கள் 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் எரிசக்தி மற்றும் காலநிலை மாற்ற விவகார அமைச்சராகப் பதவி வகித்ததோடு, சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஜி.எஸ்.பிளஸ் வரிச்சலுகை அவரது முயற்சியின் காரணமாகவே பறிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு இவ் வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் சிறீலங்கா அரசாங்கத்திற்கு மீளளிக்கப்பட்டது பற்றி இன்றைய பேரணியில் கருத்துக் கூறிய சேர் எட் டேவி, இதனையிட்டுத் தான் கடும் சீற்றம் கொண்டதாகவும், இவ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் களமாக ஐ.நா. மன்றம் மாறுவதைத் தடுத்து நிறுத்துவதற்குப் பிரித்தானிய அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது உரையின் பொழுது சேர் எட் டேவி அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.

தமிழீழ மக்களின் நெடுங்கால நண்பராகிய சேர் எட் டேவி அவர்களை ‘வெள்ளைப் புலி’ என்று கடந்த 2014ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகமாகிய த சண்டே லீடர் முத்திரை குத்தியமை குறிப்பிடத்தக்கது.  

 

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....