‘தமிழீழம் மலர்வது தவிர்க்க முடியாதது: எமக்கான காலம் கனியும்!’ வட அயர்லாந்து தலைநகரில் பிரமாண்டமான நிரந்தர வீதியோர சுவரோவியம்

May 18, 2017

‘தமிழீழம் மலர்வது தவிர்க்க முடியாதது: எமக்கான காலம் கனியும்’ என்று பொருள்படும் ஐரிஸ் (Irish) மொழியிலான வாசங்களையும், தமிழீழ வரைப்படத்தையும், பெண் புலிவீராங்கனை ஒருவரின் ஓவியத்தையும் கொண்ட பிரமாண்டமான நிரந்தர வீதியோர சுவரோவியம் வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ற்றில் (Belfast) தீட்டப்பட்டுள்ளது.

இன்று மாலை வட அயர்லாந்தின் பெல்பாஸ்ற் (Belfast), டெரி (Derry) ஆகிய நகரங்களில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்த நிலையில் பெல்பாஸ்ற் நகரில் மக்கள் அதிகமாகப் பயணிக்கும் வீதியோர நடைபாதையில் பிரமாண்டமான நிரந்தர சுவரோவியம்  தீட்டப்பட்டுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

செய்திகள்
புதன் யூலை 26, 2017

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை நீக்கும் ஆணையை இன்று (26.07.2017) ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

புதன் யூலை 26, 2017

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியப் பேரவைக்கு ஐரோப்பிய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.