‘நான் மரணிக்கிறேன் டூவல்’!

Tuesday November 06, 2018

பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த பெருங்கவிஞன் சார்லஸ் போடெலேரின் தற்கொலை கடிதம் 2,67,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அவர் அந்த கடிதத்தை தன் காதலி ஜீன் டூவலுக்கு எழுதி இருந்தார் 1845 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி எழுதி இருந்தார்.

அந்த கடிதம் எழுதப்பட்டபோது அவருக்கு 24 வயது. கடிதம் எழுதப்பட்ட அதே நாளில் தற்கொலைக்கு முயன்றவர் பிழைத்துக் கொண்டார்.

மரணித்து இருப்பேன்

தான் ஏன் தற்கொலை செய்ய இருக்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் விளக்கி இருந்த அவர், "இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது, நான் மரணித்து இருப்பேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

பரம்பரை சொத்து

நிர்ணயக்கப்பட்ட தொகையைவிட மூன்று மடங்கு தொகைக்கு அந்த கடிதம் ஏலத்தில் எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் ஏல இணையதளமான ஒஸ்நாட் கூறுகிறது.
 
பரம்பரை சொத்தை வீணாக்கியதால் நிதி நெருக்கடியில் இருந்த சார்லஸ், தன்னைதானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார். ஆனால், பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

அந்த தற்கொலை முயற்சிக்குப் பின் 22 ஆண்டுகாலம் வாழ்ந்தார். தலைமுறைகள் கடந்தும் பிரான்ஸ் கவிஞர்களை வசீகரிப்பவராக இருக்கிறார். அவர் எழுதிய 'தீய மலர்கள்' தொகுப்பு பெரும் மரியாதையை அவருக்கு ஈட்டி தந்தது.