‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40 " சுவீடனில் தமிழ்த் தேசிய கருத்தரங்கு

வெள்ளி மார்ச் 11, 2016

வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40வது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்புப்பெற்றுள்ளது.  

தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் “வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக வரும் 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. 

சத்தியத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட இலட்சியத்திற்காகத் தமது சுயநல இன்பங்களைத் துறந்து சாவினைத் தழுவிய மாவீரர்களின் தியாக வரலாற்றின் பிரவாகமானது தமிழ் மக்களை தலைநிமிர வைத்தது.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையானது மாவீரர்களின் உயிர்த்தியாகத்தால் உயிர்பெற்றதுடன் மூன்று தசாப்தங்கள் கடந்தும் அந்த இலட்சியதில் பற்றுக் கொண்டு, உறுதி கொண்ட மக்கள் சக்தியாக தமிழர்களை ஒன்று திரட்டியுள்ளது. 

எமது விடுதலையை வென்றெடுக்கும் வகையில் இவ் ஆண்டை வலுவூட்டும் ஆண்டாக நாம் பல வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கவும்   தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை , இறைமையுள்ள தமிழீழம் எனும் அடிப்படையில் , 40 வருடங்கள் பின்னோக்கி மட்டும் அல்லாமல் எமது விடுதலையை வென்றெடுக்க முன்னோக்கிய போராட்டத்தையும் குறிக்கும் வகையில் சுவீடன் நாட்டில் எதிர்வரும் 12.03.2016 அன்று வட்டுக்கோட்டை 40 வது ஆண்டு நிறைவை ஒட்டிய  தமிழ்த் தேசிய கருத்தரங்கு நடைபெறவிருக்கின்றது. இக் கருத்தரங்கில் பல தமிழீழ , தமிழக  உணர்வாளர்கள் , நேரடியாகவும் இணையவழி ஊடாகவும் கலந்துகொள்ள இருகின்றனர் .இவ் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய இரு அமைப்புகளும் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது .

தொடர்புகட்கு :vaddukkoddai40@gmail.com