“ தாமோதரகானம்’’ நான்காவது ஆண்டு நிகழ்வு

April 16, 2017

யா- சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கம், ஆசிரியர்சங்கம்  ஆண்டுதோறும் இக்கல்லூரியின் ஸ்தாபகர் உயர்திரு. தாமோதரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்;தமாக தாமோதரகானம் என்னும் பல்சுவை நிகழ்வினை நடாத்திவருகின்றனர். 

நான்காவது ஆண்டாக 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேசத்தில் அமைந்துள்ள Bourse du Travail de Saint – Denis மண்டபத்தில் மதியம் 12.00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடனும் அகவணக்கத்ததுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வின் மங்கள விளக்கினை இந்நிகழ்வின் பிரதவிருந்தினராக வந்து கலந்து கொண்ட இந்துக்கல்லூரி மாணவனும் பிரித்தானிய அரசினால் சிறந்த புதிய தொழில்நுட்ப கண்டு பிடிப்பான ( நிலையியல் குறிகாட்டி GBS ) சிறந்த கண்டுபிடிப்பாளனாக மதிப்பளிக்கப்பட்டவரும், பிரித்தானிய அரசின் விஞ்ஞானஉயர்  பீடத்தின் ஆலோசகராகவும் இருந்து வரும் இளநிலை விஞ்ஞானி ( Engineering Research and Teaching Intereste ) திரு. சிதம்பரநாதன் சபேசன் அவர்களும்  ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்களும் பிரான்சின் பழைய மாணவர் சங்க ஸ்தாபகர்கள் ஏனைய சங்க பிரதிநிதிகள் தமிழர் நல அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஏற்றி வைத்திருந்தனர். 

சங்கத்தின் உபதலைவர் திரு. செ. பாஸ்கரன் அவர்கள் அமரர் தாமோதரம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து கல்லூரிக்கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர் திரு. சி. தயாளன் அவர்கள் வரவேற்புரையை வழங்கியிருந்தார். 

 தொடர்ந்து சுமித்திரா பரதநாட்டிய மாணவிகளின் வரவேற்புரை நடனம் இடம்பெற்றிருந்தது. தலைமை உரையை சங்கத்தலைவரும் இந்துக்கல்லூரி முந்நாள் ஆசிரியருமாகிய திரு. இ. இராஐலிங்கம் அவர்கள் ஆற்றியிருந்தார். 

தனது உரையிலே சா. இந்துக்கல்லூரி கடந்த கால நெருக்கடி சூழ்நிலையில் ஓரளவு மீண்டெழுத்து அனைத்து துறைகளிலும் தேசிய மட்டத்தில் இன்று சிறந்து விளங்குவதையும் அதற்கு பின்புலமாக புலம்பெயர்ந்த பழைய மாணவர்களும் அவர்களின் சங்கங்களும் கைகொடுத்து வருவதையும் அந்த உன்ன நோக்கத்தைக் கொண்டே பிரான்சில் உருவாக்கப்பட்ட பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் காலத்தின் தேவையறிந்த தனது சேவையை செய்து வருகின்றது என்றும் தாமோதரகானம் என்பதன் அர்த்தமும் தென்னகத்தாரகை விருது பற்றிய விளக்கமும் அந்த நிகழ்வின் தன்மை முக்கியத்துவம் பற்றியும் அதனால் அடையப்படும் பயன்கள் பற்றியும் இதனை முதலில் முக்கியமாக புரிந்து கொண்டு கைகொடுக்க வேண்டியவர்கள் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களும் கல்லூரியில் அக்கறை கொண்டவர்களும் தாய்மொழியிலும் கல்வியிலும் இனத்திலும் கரிசனை கொண்ட அனைவருக்கும் உரியதாகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தென்னகத்தாரகை விருதினைப் பெற்றுக்கொண்ட அக்சயன் பாடலை வழங்கிப் பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார்.

 தென்னகத்தாரகை ( கரோக்கி சினிப்பாடல்கள் ) விருதுக்கான போட்டிக்கு நடுவர்களாக நடுநிலைவகிக்க வந்திருந்த நடுவர்களை இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் கர்நாடக சங்கீத இசை ஆசிரியர் இசைமாமணி திரு.க. சேயோன் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.  

தமிழீழத்தின் தலைசிறந்த பிரபல்யமான நடனக்கலை ஆசிரியர்  திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்களின் புதல்வியும் லண்டனில் கலாமன்ற நிறுவனரும் நடனம் வாய்ப்பாட்டு ஆசிரியருமான திருமதி.சுதாகரன் நந்தினி அவர்களும் பிரான்சில் பல பாடல்களை இசையமைத்து பாராட்டுதல்களை பெற்று வருபவரும் அந்த ஆலமரம் நெஞ்சினில் குடியிருக்கு என்ற பாடலுக்கு சொந்தக்காரனும், சுரத்தட்டு ஆசிரியருமான திரு. தில்லைச்சிவம் அவர்களும் ஜேர்மன் நாட்டிலிருந்து கலாஜோதி இசைக்கலாமணி லசிகப்பிரியம் கலைக்கல்லூரி ஸ்தாபகருமாகிய திருமதி.சிவசங்கர் ஜெயதர்சினி அவர்களும் கடமையாற்றியிருந்தனர். பொலி எக்ஸ்பிறஸ் நடனக்குழுவின் நடனமும் இடம்பெற்றன. 

இலங்கைத் தமிழ் பழையமாணவர் சங்கத் பிரான்சுக்கிளைத் தலைவர் திரு. யா. பாலகிருஸ்ணன் அவர்கள் தமது கல்வி மூலமான மனிதநேய செயற்பாட்டினைப் பற்றியும் தமிழர் பகுதியில் பின் தங்கியுள்ள பாடசாலைகளையும் மாணவர்களையும் முன்னேற்றி ஆயிரம் மாணவர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கான முன்னேற்றப்பதைகளுக்கு உதவிடுதல் போன்ற செயல் திட்டங்களையும் அதற்கு எந்தவித பேதமுமின்றி உதவிடல் வேண்டியது அனைவரின் கடமை என்றும் கூறியிருந்தார். 

இன்று எங்கு எதிலும் எப்பொழுதும் மங்காப் புகழுடன் அனைத்து தமிழர் நெஞ்சங்களிலும்  வாழ்ந்து கொண்டும் எதிர்பார்துக் கொண்டும் இருக்கின்ற தமிழீழ தேசியத்தலைவர் புகழ்பாடும் எங்கள் தலைவன் பாடலுக்கு எழுச்சி நடனத்தை வழங்கிய போது மிகுந்த கரகோசம் கிடைக்கப்பட்டது. இசைவேளையில் இளையமாணவர்களின் மிருதங்க வயலின் இசை மிகவும் சிறப்பாக இருந்தது. 

 2016ம் ஆண்டு தாமோதரகானம் நிகழ்வின் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது . வெளியீட்டுரையினை இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்க ஸ்தாபகர்களில் முதன்மையாவரும் மனிதநேயச் செயற்பாட்டாளருமாகிய தற்போதைய பொருளாளருமாகிய ஆசிரியர் திரு. த.பரமானந்தம் அவர்கள் வழங்க திரு. மேத்தா அவர்கள் வெளியிட்டு வைத்து காலத்திற்கேற்ற உரையையும் தந்திருந்தார். மேலும் வாழ்த்துரைகளை ஜேர்மனியில் இருக்கும் இந்துக்கல்லூரி பழைய மாணவர் கவிமாமணி திரு.ரி குகதாஸ் அவர்களும் வழங்கியிருந்தார். அடங்காப்பிடாரி புகழ் நடனக்கலைஞர்; என்.ரி. குணம் அவர்கள் திரையிசைப்பாடலுக்கு நடனம் வழங்கியிருந்தார். 

பிரதம விருந்தினர். திரு. சிதம்பரநாதன் சபேசன் அவர்கள் தனது உரையினை வழங்கியிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் வழங்கிய உரை எமது புதிய சமுதாயத்திற்கும் ஒரு உறுதியான வழிகாட்டலாக இருந்திருந்தது. 

அவரின் உரையில் நம்பிக்கையும், விடா முயற்ச்சியும் உறுதியும் கனவும்  ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. பெறுமதிமிக்க பொருளை அமெரிக்க ஏலத்தில் விடப்பட்டு அதில் வரும் லாபத்தினை கல்லூரியின் வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்டு வருகின்றது. மத்தியபிரிவுக்கான போட்டிகளும் மேற்பிரிவினருக்குமான போட்டிகளும் நடைபெற்றன.

 பங்கு பற்றி அத்தனை போட்டியாளர்களும் மிகச்சிறந்த பாடகர்கள் என்றும் யாரை வெற்றியாளர்களாக தீர்மானிப்பதற்கு தாம் மிகுந்த சிரமப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்திருந்தார்கள். நன்றியுரையினை செயலாளர் திரு.மா.தயாளன் அவர்கள் வழங்கினார். 2017 நடைபெற்ற தாமோதரகானம் போட்டியில் தென்னகத்தாரகை விருதினை செல்வன். இராசலிங்கம் றொசான் அவர்கள் பெற்றுக்கொண்டார். 

போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டியவர்களுக்கு சிறப்பு விருந்தினரில் ஒருவரான திரு. தே. பிரகலாதன் அவர்களும் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து கலந்து கொண்ட பழைய மாணவர்கள், மற்றும் நலன்விரும்பிகள் மதிப்பளித்திருந்தனர். 

அறிவிப்புகளை ஆசிரியர் திரு. த. பரமேஸ்வரன் அவர்கள் வழங்கியிருந்தார். பிரான்சில் வாழும் இக்கல்லூரியின் பழைய மாணவர்களான பெரியவர்களும் இளையவர்களும் இன்னும் அதிகமாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் எல்லோரிடமும் ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரங்கள் பின்வருமாறு.

கீழ்ப்பிரிவு

1ம் இடம் : செல்வி. அமலியா சத்தியநாதன்
2ம் இடம் : செல்வி.நி. ரஞ்சித்குமார் தேவஅமிர்தா
3ம் இடம் : செல்வி. ஐீவராஐா பிரியந்திக்கா
 
 மத்தியபிரிவு

1ம் இடம் : செல்வி. எட்வேட் லூயிஸ் அநோஐpனி
2ம் இடம் : செல்வி. வருசினி சிறிசுதேஸ்கரன்
3ம் இடம் : செல்வி. உவானா உதயகுலசிங்கம்

மேற்ப்பிரிவு

1ம் இடம் : செல்வன் இராசலிங்கம் றொசான்
2ம் இடம் : திரு. அன்சலோ செல்வராஐா
3ம் இடம் : செல்வி. சின்னத்தம்பி கார்த்திகாயினி

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....