06 பேரை சுட்டுக் கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை!

வியாழன் சனவரி 10, 2019

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 06 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மிகல் ஜூலிகே பிரசன்ன பெரேரா மற்றும் சம்பர் பெர்ணான்டோ ஆகிய இருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாகனம் ஒன்றிற்குள் 06 பேரை சுட்டுக் கொலை செய்த மற்றும் அதற்கு சதித்திட்டம் தீட்டியதாக நால்வருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நீண்ட விசாரணைகளின் பின்னர் மிகல் ஜூலிகே பிரசன்ன பெரேரா மற்றும் சம்பர் பெர்ணான்டோ ஆகிய இருவரையும் நீதிபதி கிஹான் குலதுங்க குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்துள்ளார். 

அதன்படி இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஏனைய இருவரையும் குற்றமற்றவர்களாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.