07 கைதிகள் விடுதலை- இந்திய அரசே தீர்மானிக்க வேண்டுமாம்!

Tuesday September 11, 2018

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை விடுவிப்பது குறித்து இந்திய அரசே தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

 இந்தியா பயணித்துள்ள மகிந்த புதுடில்லியில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   விடுவிப்பு நடவடிக்கை இந்திய அரசமைப்பு மற்றும் சட்டவிதிகளுக்கு உட்பட்டது என்பதனால், எனக்கு எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக ஆளுநரிடம் இருப்பதாக உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.  அதற்கமைய குறித்த ஏழு பேரையும் விடுவிப்பதற்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு, அந்தத் தீர்மானத்தை தமிழக ஆளுநரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.