08.05.2009: சிங்களப் படைகளால் 134 தமிழர்கள் படுகொலை – சர்வதேசத்திற்கு முட்டாள் பட்டம் கட்டப்படுகிறது – திலீபன்!

வெள்ளி மே 08, 2020

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்று பொய்யுரைத்து சர்வதேச சமூகத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் முட்டாள் பட்டம் கட்டுவதாக திலீபன் தெரிவித்த செவ்வியை வெளியிடுகின்றோம்.

 

சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் 08.05.2009 வெள்ளிக்கிழமை அன்று சிங்களப் படைகள் நிகழ்த்திய கொலைவெறித் தாக்குதல்களில் 134 தமிழர்கள் பலியாகினர்.

 

இவர்களில் 32 பேர் நிவாரணம் பெறுவதற்காக நீள்வரிசையில் காத்திருந்தவர்கள். இவர்கள் காத்திருப்பதை ஆளில்லா வேவு விமானங்கள் மூலம் அவதானித்து இந்தத் தாக்குதல்களை சிங்களப் படைகள் நிகழ்த்தியதாகத் தனது செவ்வியில் அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார்.

 

இச் செவ்வியை காலத்தின் தேவை கருதி ஊடக மையம் (பிரான்ஸ்) மீள் வெளியீடு செய்கின்றது.

 

செவ்வி கண்டவர்: கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்தராஜா, ஊடக மையம் (பிரான்ஸ்)

 

திலீபன் செவ்வி