10 கோடி ஆண்டுகள் பழமையான சிலந்தி கண்டுபிடிப்பு!

February 07, 2018

தென்கிழக்கு ஆசிய காடுகளில் 10 கோடி ஆண்டுகள் பழமையான நீண்ட வால் உடைய சிலந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய காடுகளில் விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் பழமையான சிலந்தியை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலந்தி மர பிசினில் உறைந்து இருந்துள்ளது. ஏறக்குறைய 10 கோடி ஆண்டிற்கு முன்பு வாழ்ந்த சிலந்தியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இதுவரை 50 ஆயிரம் சிலந்தி வகைகள் உலகில் உள்ளன. ஆனால் இந்த சிலந்திக்கு தேள் போன்று நீண்ட வால் உள்ளது. இதன் மூலம் ஆரம்ப காலத்தில் இருந்த சிலந்திகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும் எனக் கூறப்படுகிறது. இது போன்ற பல உயிரினங்கள் மியான்மர் காடுகளிலிருந்து ஆண்டுதோறும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தியின் நீளம் 6 மி.மீட்டராகும். இதில் பாதி அளவுக்கு வால் உள்ளது. பொதுவாக சிலந்திகள் வாயிலிருந்து வரும் நூல் போன்ற திரவம் மூலம் வலைப்பின்னி அதில் வாழ்கின்றன. ஆனால் இந்த சிலந்திக்கு வலைப்பின்னுவதற்கான எந்த உடல் அமைப்பும் இல்லை. இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

செய்திகள்
செவ்வாய் February 13, 2018

ஐக்கிய நாடுகள் சபையானது 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் திகதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.