10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்!

செவ்வாய் பெப்ரவரி 06, 2018

சீனாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் யோகா மூலம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த சன் சுயாங் என்ற 7 வயது சிறுவன் யோகா மையங்களில் யோகா கற்றுக்கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். மிகச்சிறிய வயதில் யோகாவினை எளிதாக கற்றுக்கொடுக்கும் சுயாங், இதன் மூலம் இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறான். 

சுயாங் இரண்டு வயதிலிருந்து யோகா கற்று வந்ததால் அவனுக்கு யோகா மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. யோகாவில் அவனுடைய திறமையை கண்ட அனைவரும் யோகா கற்று கொள்ள ஆசைப்படுகின்றனர். யோகாவின் மூலம் பல நோய்கள் குணமடைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய கலைகளில் ஒன்றாக யோகா சீனாவில் 2000-ம் ஆண்டு முதல் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆயிரக்கணக்கான யோகா மையங்கள் சீனாவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.