10 வயது சிறுவனின் விசித்திரச் செயற்பாடு!

ஒக்டோபர் 14, 2017

இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான்.

எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த  ஜெக் ஜோய் என்ற சிறுவன்  தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார்.

தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும் வைத்திருக்கிறார்.

Channel 5's Gypsy Kids  என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இச்சிறுவன்,

"தற்போது எனக்கு 10 வயதாகிறது, எனக்கு தேவையானவை அனைத்தும் என்னிடம் இருக்கிறது ஆனால் சிறுவயது என்பதால் இன்னும் 8 வருடத்துக்கு பைக் இருந்தும் என்னால் ஓட்ட முடியாது .

இனிமேல் எனக்கு தேவையான பணத்தினை நானே சம்பாதித்துக்கொள்வேன், என் பெற்றோரிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டேன். முழுமையாக வளர்ந்துவிட்ட ஒரு ஆளாகவே என்னை எனது பெற்றோர் பார்க்கின்றனர், தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான்" என கூறியுள்ளார்.

செய்திகள்
ஞாயிறு யூலை 15, 2018

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டும்  அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டும் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

ஞாயிறு யூலை 15, 2018

எகிப்து நாட்டில் ஒரு போலீஸ்காரரும்  ஒரு பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கை நைல் நதி நகரமான எல் ஜகாஜிக்கில் உள்ள கிரிமினல் கோர்ட்டு விசாரித்தது.