10 வருடமாக கத்தி என் பேச்சை கேட்கிறீர்கள்;ஏன் வாக்கு வரலை?

திங்கள் அக்டோபர் 07, 2019

10 வருடமாக கத்தி என் பேச்சை கேட்கிறீர்கள்,ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை.18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா.அவர்கள் தான் தமிழர்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “10 வருடமாக கத்தி என் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. 18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா அவர்கள் தான் தமிழர்கள்.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்கள் தமிங்கிலர்கள். இவர்கள் கேட்கும் பாட்டு புரியவில்லை என்பதற்காக அவர்களுக்கு ஆங்கல எழுத்துக்கள் ஓடவிடப்படுகிறது. எழுத்து இங்கிலீஸ், ஆனால் அது தமிழ் வார்த்தைகள். இவர்கள் தான் தமிங்கிலர்கள்.

இவர்களை என்ன செய்ய வேண்டும் என்றால், பிடித்து மரத்தில் கட்டி வைத்து, திருக்கவால் பார்த்திருக்கிறீர்களா. இல்லை விட்டுவிடுங்கள்,,

பச்சை மட்டையை எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும். தொலைத்துவிடுவேன் என்றார்.

60 வயது அப்பனை கிழவன்.. 70 வயது நடிகனை தலைவன் என்கிறான் தமிழன் என்று ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார். அவரை பாகிஸ்தான் எல்லைக்கு அனுப்பினால் அங்கு போய் ஒருமுறை சொன்னால், 100முறை என்பது எடுபடுமா என்றார்.

தமிழில் பெயர் வைக்காத தமிழ் திரைப்பட இயக்குனர்களை கடுமையாக சீமான் விமர்சித்தார். வீரத்துல கட்டபொம்மன்.சுரத்துல ஊமத்துரை.ரோசத்துல நீ ஒரு தேசிங்கு ராஜா என்று சினிமா பாடல் ஒன்றை பாடி அதில் உள்ள கட்டபொம்மன், ஊமைத்துரை, தேசிங்கு ராஜா போன்ற மூன்று மன்னர்களும் தமிழர்கள் இல்லை என்று விமர்சனம் செய்தார்.

மானமும் வீரமும் அறம் என்று வாழ்ந்த கூட்டம் தமிழ் இனம்.எங்கள் கூட்டத்தில் ஒருவர் கூடவா இல்லை என்று கேள்வி எழுப்பினார். வைரமுத்து கூட ஒருமுறை ஜான்சி ராணியிடம் வீரம் வாங்குவோம் என்று எழுதி இருந்தார். ஏன் வேலுநாச்சியாரிடம் வீரம் வாங்கலாம் அல்லவா என்றும் கேட்டார்.