105 மத குருக்கள் கைது!

January 05, 2017

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட கவர்னர் நினைவு தினத்தை கொண்டாடிய 105 மத குருக்கள் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண கவர்னராக இருந்த சல்மான் தசீர் அவரது பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் மத அவமதிப்பு சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கு ஆதரவான கருத்துக்களை சல்மான் தசீர் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது பாதுகாவலர்களில் ஒருவர் அவரை சுட்டுக்கொன்றார்.

அவரது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கொண்டாடும் வகையில் தெக்ரிக் லப்பாயக் யா ரசூலா என்ற அமைப்பு லாகூரில் குல்பர்க் உள்ளிட்ட 2 இடங்களில் ஆதரவு பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

லாகூரில் மால் ரோட்டில் நடந்த பேரணியில் ஏராளமான மத குருக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கவர்னர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

அதை தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற 105 மத குருக்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே குல்பெர்க்கில் நடைபெற இருந்த பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

செய்திகள்
ஞாயிறு April 30, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியோற்று 100வது நாள் பூர்த்தி விழா நேற்று பென்சன்வேனியாவில் இடம்பெற்றது.

சனி April 29, 2017

வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

புதன் April 26, 2017

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்