11 பேர் பாதிப்பு குளவி கொட்டியதால்!

புதன் செப்டம்பர் 11, 2019

ஹட்டன், டிக்கோயா என்பில்ட் நோனா தோட்டத்தில் குளவிக் கொட்டிற்கு இலக்கான 11 பேர், டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா என்பில்ட் நோனா தோட்டத்திலுள்ள  05 ஆம் இலக்க தேயிலை மலையில் இன்று (11) காலை   தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே குளவிக் கொட்டிற்கு இலக்காகியுள்ளனர்.  

05 ஆம் இலக்க தேயிலை மலையில் தொழிலாளர்கள்  தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், ஆண் தொழிலாளர் ஒருவர் புற்களுக்கு மருந்து அடித்துக்கொண்டிருந்தார்.

இதன்போது முருங்கை மரத்தில்   குளவிக் கூட்டில் இருந்த குளவிகள் கலைந்து வந்து  தொழிலாளர்களை கொட்டியுள்ளதாக, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.