12 பில்லியன் ரூபாவை நட்டத்தை ஏற்படுத்திய சலாவ வெடிவிபத்து!

March 13, 2018

கொஸ்கம -சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தினால் 12 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குழுவினால் நட்டம் தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
  
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 14 இராணுவ உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இந்த வெடிப்புச் சம்பவத்தினால் சேதமடைந்த வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டனவற்றை நிர்மாணிப்பதற்கு இராணுவத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016ஆம் அண்டு ஜுன் மாதம் 5ஆம் திகதி சாலவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 47 வரையில் காயமடைந்திருந்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கும் வரையில் சம்பவத்திற்கான காரணங்களை சரியாக வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

வனவள விலங்கை துன்புறுத்துவது எந்தளவு தூரம் சட்டப்படி தவறான விடயமோ அவ்வாறான விலங்குகளை கூட்டில் அடைந்து அனுமதியின்றி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் வளர்ப்பதும் தவறான விடயமே என்று தமிழ்த் தேசியக் க

திங்கள் யூலை 16, 2018

வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்படவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திங்கள் யூலை 16, 2018

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.