12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்க்கு இசை- ஜி.வி.பிரகாஷ்

வியாழன் டிசம்பர் 06, 2018

இயக்குனர் வசந்தபாலன் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து 'ஜெயில்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

அதில்..."வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடித்து, இசையமைக்கும் 'ஜெயில்' படத்தின் மூலம் திறமைமிக்க அதிதி ராவ் ஹிடாரி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

காத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம்" என பதிவிட்டுள்ளார். மேலும் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.