13 வயது சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம்

செப்டம்பர் 12, 2017

மூளை இரத்த நாள வீக்கத்தால் இறந்த 13 வயது சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன. ஒருவரின் உடல் உறுப்புகள் அதிகமானோருக்கு தானம் செய்யப்பட்டிருக்கும் வரலாற்றுப் பதிவு இதுதான்.

சோமர்செட்டில் வாழ்ந்த ஜெமிமா லேஸெல் 2012 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம், சிறு குடல் மற்றும் கல்லீரல் உறுப்புகள் 5 குழந்தைகள் உட்பட 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன. ஜெமிமா மிகவும் புத்திசாலி, இரக்க குணமுடையவர் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர் என்று தெரிவித்திருக்கும் அவருடைய பெற்றோர், அவர் விட்டுச் சென்றுள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை செய்யப்பட்ட உறுப்புகள் தானத்தில் இவ்வளவு அதிகமானோருக்கு ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் பயன்பட்டதில்லை என்று ஐக்கிய இராஜ்ஜிய தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

தன்னுடைய தாயின் 38-ஆவது பிறந்தநாளுக்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜெமிமா மயக்கமுற்றார். குழந்தைகளுக்கான பிரிஸ்டல் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நான்கு நாட்களுக்கு பின்னர் உயிரிழந்தார். அவருடைய இதயம், சிறு குடல், கணையம் ஆகியன மூன்று பேருக்கு வழங்கப்பட்டன. அவருடைய சிறுநீரகங்களை இருவர் பெற்றுக்கொண்டனர். இந்த சிறுமியின் நுரையீரல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மேலும் இருவர் தானமாகப் பெற்றனர். அவரது இரு கல்லீரல்களும் ஒரு நோயாளிக்கு வழங்கப்பட்டன.

பொதுவாக, தானம் செய்யப்படும் உறுப்புகளில் 2.6 பங்குதான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நிறைவு பெறுகின்றன. எட்டு என்பது வழக்கத்திற்கு மாறான அதிக எண்ணிக்கையாகும்.

நாடகப் பயிற்சியாளராக இருக்கும் 43 வயதான ஜெமிமாவின் தாய் சோஃபி லாஸெலும் கட்டட நிறுவனம் ஒன்றின் மேலாளராக இருக்கும் 49 வயதான தந்தை ஹார்வி லாஸெலும், 17 வயதான ஜெமிமாவின் சகோதரி அமிலியாவும் ‘த ஜெமிமா லெஸெல்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள்.

மூளைக்காயம் ஏற்பட்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவுவதோடு, உறுப்புகளை தானம் வழங்குவதையும் இவர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

செய்திகள்
ஞாயிறு யூலை 01, 2018

ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது.