13 வருட தொடர்ச்சியான கல்வி திட்டத்திற்கு பின்லாந்து அரசு உதவி!

Wednesday June 13, 2018

கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுள்ள 13 வருட தொடர்ச்சியான கல்வி திட்டத்திற்கு பின்லாந்து அரசு உதவி செய்ய தீர்மானித்துள்ளது.  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் பின்லாந்தின் பிரதி கல்வி அமைச்சர் பெட்ரி பெல்டோனஸ் ஆகியோர்கிடையில் கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 அதன்படி , தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக பின்லாந்து அரசின் உதவி எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.