1/4 மதுபான போத்தல்களால் சுற்றாடலுக்கு பாதிப்பு

புதன் நவம்பர் 25, 2020

70 மில்லியன் 1/4 (கால்)  மதுபான போத்தல்கள் வருடாந்தம் சூழலுக்கு விடுக்கப்படுவதாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றாடல் பாரிய அழிவை சந்திப்பதாகவும் குறித்த 70 மில்லியன் போத்தல்கள் ஒரு நிறுவனத்தினால் மாத்திரம் அன்றி, பல்வேறு நிறுவனங்களால் சூழலுக்கு விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவ்வாறு சூழலில் விடுவிக்கப்பட்டுள்ள போத்தல்களை 6 மாத காலத்துக்குள் சேகரிக்குமாறு, சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் இவற்றை மீண்டும் சேகரிக்க பின்நின்றால், அடுத்த வருடத்திலிருந்து இந்த போத்தலை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து 6 மாத காலப்பகுதிக்குள் இந்த போத்தலுக்கான மாற்றுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு, மதுபான உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் 1/4 போத்தல்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.