1428 டால்பின் மீன்களை கொன்று குவித்த கொடூரம்-

புதன் செப்டம்பர் 15, 2021

வடக்கு அட்லாண்டிக்- பாரம்பரிய திருவிழாவுக்காக, படகுகள் மூலம் 1,428 டால்பின் மீன்களை பிடித்து வந்து கரையில் கொண்டு வந்து கத்தியை வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள போரோ தீவில் உள்ள கடற்கரை இரத்த வெள்ளத்தில் காட்சியளித்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியில், இது ஒரு பாரம்பரிய திருவிழாவின் கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு அட்லாண்டிக் போரோ தீவு மக்கள் தங்கள் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடி உள்ளனர்.

திருவிழாவின் ஒரு பகுதியாக, தீவில் உள்ள மக்கள் தங்கள் படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து வந்து கரையில் கொண்டு வந்து கத்தியை வைத்து வெட்டி கொன்று குவித்துள்ளனர்.

இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், ரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்யளிக்கின்றது. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த இயற்கை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் மேலும் இது ஒரு காட்டுமிராண்டி செயல் என்றும், நவநாகரிக உலகத்தில் இதுபோன்ற செயல் என்பது மனிதன் கற்க காலத்திற்கே கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.