146 வயது இந்தோனேசிய முதியவர் மரணம்!

May 02, 2017

உலகிலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜோ மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார்.

சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, ம்பா கோட்டோ (தாத்தா கோட்டோ) 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்கள் சான்றளிக்கின்றன. ஆனால், இந்தோனேசியாவில் 1900ஆம் ஆண்டில்தான் பிறப்புப் பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்கலாம்.

இருந்தபோதிலும், சோடிமெட்ஜோ அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது வயது 146 என்பது உண்மை என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். மேலும் இந்த முதியவரிடம் எடுத்த பேட்டியின்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் அவரது வயது 146 என்பது நம்பக்கூடியதுதான்.

செய்திகள்