14வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

புதன் செப்டம்பர் 11, 2019

தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு  ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா நோக்கி நீதிக்கான நடை பயணம் இன்று 14வது நாளாகத் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

இன்றைய நடைப்போராட்டம் 360 கிலோ மீற்றர் தூரத்தைத் தாண்டி நகர்ந்துகொண்டிருக்கிறது.

111

குறித்த நடைபோராட்டம் எதிர்வரும் 16ஆம் நாள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு முன்பாக நிறைவடையவுள்ளது. நிறைவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் போராட்டம் குறித்த மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.