15 குழந்தைகள் உயிரை காப்பாற்றிய சமந்தா!

Sunday November 05, 2017

நடிக்க வந்ததில் இருந்தே ஏழை குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகை சமந்தா 15 குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்.

சமந்தா நடிக்க வந்ததில் இருந்தே ஏழை குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார்.

ஏழை குழந்தைகள், பெண்களுக்கு உதவுவதற்காக 2012-ம் ஆண்டு ‘பிரதியுஷா’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். தனது மருத்துவ நண்பர்களுடன் சேர்ந்து இந்த அமைப்பின் மூலம் பல்வேறு மருத்துவ உதவி செய்கிறார். குழந்தைகளுக்கு தேவையான மருத்துவத்துக்கான நிதி திரட்ட நடிகர்-நடிகைகளை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், நிதி உதவியையும் செய்து இருந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு இந்த 15 குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

சமந்தாவின் இந்த மனிதநேய சமூக சேவைக்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் சமந்தாவை ஏராளமானோர் வாழ்த்தி வருகிறார்கள்.

தன்னைப்போல மற்றவர்களையும் நேசிக்கும் அவருடைய வழியை மற்ற நடிகர், நடிகைகளும் பின்பற்றினால் ஏழைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற கருத்து பரவி வருகிறது.