15-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா!

Saturday December 09, 2017

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் டிசம்பர் 14-ம் திகதி மாலை 6.15 மணிக்கு கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது 15-வது சென்னை சர்வதேசப் பட விழா.

தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் கலந்துகொள்ளும் படங்கள் அட்டோபர் 31-க்கு முன்பாக தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதியின் கீழ் கலந்துகொள்கின்றன. இந்தப் பிரிவின் கீழ் சிறந்த படம், சிறந்த இயக்குநர், ஸ்பெஷல் மென்ஷன், யூத் ஐக்கான் உட்பட ஆறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மொத்த பரிசுத் தொகை ஏழு லட்சம் ரூபாய். போட்டிக்கு 22 படங்கள் வந்துள்ளன. இவற்றில் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும் 12 படங்கள் இறுதிப் போட்டியில் மோதும்.

1. அறம்

2. இப்படை வெல்லும்

3. இவன் தந்திரன்

4. கடுகு

5. கனவு வாரியம்

6. லைட் மேன்

7. மனுஷங்கடா

8. மாநகரம்

9. மாவீரன் கிட்டு

10. மகளிர் மட்டும்

11. ஒரு கிடாயின் கருணை மனு

12. ஒரு குப்பைக் கதை

13. புரியாத புதிர்

14. பீச்சாங்கை

15. ரங்கூன்

16. எட்டு தோட்டாக்கள்

17. தங்கரதம்

18. தரமணி

19. துப்பறிவாளன்

20. உயிர்க்கொடி

21. குரங்கு பொம்மை

22. விக்ரம் வேதா