1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது!

வியாழன் ஜூன் 13, 2019

தடைசெய்யப்பட்ட பொலித்தீனை உற்பத்தி செய்த தொழிற்சாலையொன்று, மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்திலேயே இத்தொழிற்சாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொழிற்சாலையிலிருந்து தடைசெய்யப்பட்ட 1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இத் தொழிற்சாலையின் உரிமையாளரான பெண்ணிடமிருந்து, குறித்தத் தொழிற்சாலை பதிவு செய்யப்பட்டமைக்கான ஆவணங்களோ சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான அனுமதிப்பத்திரமோ இல்லையென்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண் இதற்கு முன்னரும் ஹோக்கந்தர பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் தொழிற்சாலையொன்றை நடத்திச் சென்றதால், நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்டவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.