150 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் லொறியின் சாரதி சிகிச்சை பலனின்றி பலி!

திங்கள் ஓகஸ்ட் 12, 2019

ஹப்புதலை, அவிஸ்ஸாவெல்ல - செங்கலடி பிரதான வீதியின் கீழ் பிளக்வூட் பிரதேசத்தில் லொறி ஒன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது லொறியின் சாரதியும், லொறியில் பயணித்த மற்றுமொரு நபரும் படுகாயமடைந்த நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் லொறியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 36 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், ஹப்புதலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.