16 தமிழக மீனவர்களை மீட்க வேண்டி இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம்

புதன் செப்டம்பர் 02, 2015

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட, 16 தமிழக மீனவர்களை மீட்க வேண்டி, இந்தியப் பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 

 

நாகை பகுதியில், மீன்பிடித்து கொண்டிருந்த, 16 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மூன்று படகுகளை, இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. அந்த மீனவர்களை மீட்க, இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

மேலும், ஆழ்கடல் மீன் பிடித்தலை ஊக்குவிக்க, மீனவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்து வருகிறது. இந்த முயற்சிக்கு, மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். என்றும் குறித்த கடிதத்தில் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.