16 பேரை பொறுப்பேற்க தயார்!

Monday April 16, 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொதுஜன முன்னணி பொறுப்பேற்க தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.