‘165,000 மக்களைக் காப்பாற்றுங்கள் அல்லது மக்களின் பிரேதங்களை எண்ணத் தயாராகுங்கள்’ – திலீபனின் இறுதி ஒலிப்பதிவு!

வெள்ளி மே 15, 2020

165,000 மக்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறினால், அவர்களின் சடலங்களை எண்ணுவதற்குத் தயாராகுமாறு உலகிற்கு திலீபன் விடுத்த இறுதி ஒலிப்பதிவை மீள்வெளியீடு செய்கிறோம்.

 

சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாளில், 15.05.2009 வெள்ளிக்கிழமை அன்று, உலக சமூகத்திற்கான தனது கடைசி வேண்டுகோளை ஒலிப்பதிவு வடிவில் அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள் விடுத்திருந்தார்.

 

இதன் பின்னர் மறுநாள் முள்ளிவாய்க்காலில் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களுடன் அவர் நின்றதை, மணிவண்ணன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் சிலர் கண்டிருக்கின்றார்கள்.

 

ஆனால் அதன் பின்னர் திலீபன் அவர்களுக்கு என்ன நடந்தது என்று அவரது குடும்பத்தினருக்கோ, ஏனைய எவருக்குமோ இதுவரை தெரியாது.

 

திலீபன் விடுத்த இறுதி ஒலிப்பதிவு