17வது வளர்தமிழ்ப் பாடநூல் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வு!

ஞாயிறு நவம்பர் 03, 2019

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக் கிளையின் 17வது வளர்தமிழ்ப் பாடநூல் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வு(கல்வியாண்டு 2019ஃ2020) 26.10.2019 சனிக்கிழமை,வடமேற்குஇலண்டன் பகுதியானகரோவில் நடைபெற்றது.

 காலை 8.30மணிக்குபதிவுகள் மேற்கொள்ளப்பட்டு,9.00 மணிக்குஅகவணக்கத்துடன் நிகழ்வுதொடங்கியது. தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பயன்படுத்தும்104 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்தஏறத்தாள 600 தமிழாசிரியர்கள் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர். வளமைபோன்று இவ்வாண்டும் அதிகளவிலான ஆசிரியர்கள் கலந்துகொண்டு,தமதுஆசிரியவளத்தைமேம்படுத்தும்வகையில் பலகற்பித்தல் உத்திகளைப் பெற்றுக் கொண்டனர்.

n
 
மூன்றுமண்டபங்களில் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டு இச்செயமர்வுநடைபெற்றது.
மண்டபம் 1இல் ஆரம்பவகுப்புகள், வளர்தமிழ் 1,வளர்தமிழ் 2 வகுப்புகளும்.
மண்டபம் 2இல்வளர்தமிழ் 3, 4, 5 வகுப்புகளும்
மண்டபம் 3இல் வளர்தமிழ் 6,7,8,9,10,11,12 வகுப்புகளும் எனப் பிரிக்கப்பட்டுசெயலமர்வுகள் நடைபெற்றன.
 
பலஆசிரியர்கள்; பலமைல்களுக்கப்பால்,அதாவதுஸ்கொட்லாந்து, வேல்சு, சவுத்தம்டன்,ஸ்றோக் ஒன்றென்ற் லிவபூல்,மன்சஸ்டர் போன்ற தூர இடங்களில்இருந்துவருகைதந்துமிகஆர்வத்துடன் பங்குபற்றினர்.
 
மழலையர் நிலை,பாலர் நிலை,வளர்தமிழ் 1,வளர்தமிழ் 2வகுப்புகளுக்கானபயிற்சிகள் பலவகையானசெயல் முறைவழிகாட்டல்கள் மூலம் வழங்கப்பட்டன. அத்துடன் தொடர்ந்துவரும் வகுப்புகளில் மாணவர்களின் திறனைக் அதிகரிப்பதற்கானவிதிமுறைகளும் அவற்றுக்கானபயிற்சிகள்,வழிகாட்டல் உத்திகளும் வழங்கப்பட்டன.
 
பாடநூல்களில் இடம்பெற்றுள்ளதமிழர் வரலாறுகள், தெளிவானவரலாற்றுஆவணங்கள், அவைகற்பிக்கப்படவேண்டிய முறைகள்,கற்பித்தல் உத்திகள்என்பனவழங்கப்பட்டன. அத்துடன் கேம்பிரிட்ச் GCE(O/L, A/L) தேர்வுக்கானபாடத்திட்டமும் விளக்கமும்கொடுக்கப்பட்டது.
 
மாணவர்களுக்குஎவ்வாறு இலகுவாகக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதை காட்சிப்படுத்துதல்,செயல்முறைப் பயிற்சிகள்;,விiயாட்டுமுறைகள் என்பனமூலம் பயிற்றுநர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டது.

y

ஓவ்வோர் ஆண்டும் செயலமர்வுக்கானகையேடுவழங்கப்படுவதுபோன்றுஇம்முறையும் வருகைதந்திருந்த அனைத்துஆசிரியர்களுக்குமசெயலமர்வுக் கையேடுகள் வழங்கப்பட்டன.
 
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டத்தினைமுழுமையானகற்றுத் தேர்ந்த இளம் ஆசிரியர்கள் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டுஊக்கிவிக்கப்பட்டனர். அவர்கள் இத்தமிழ் பணியைதொடர்ந்துமுன்னெடுக் வேண்டியதன் அவசியம் தெளிவாகவிளக்கப்பட்டது. 

அத்துடன்; இந்தவருடம் பிரான்சுநாட்டிற்குவினாத்தாள் திருத்தும் பணிக்காகசென்ற21 ஆசிரியர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டுமதிப்பளிக்கப்பட்டனர். 
 
பதினான்குநாடுகளில்,அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்டமாணவர்கள்தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டமானவளர்தமிழ் பாடநூல்களைப் பின்பற்றிவருகின்றனர். ஐக்கிய இராச்சியத்தில் இவ்வாண்டு ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானமாணவர்கள் இப் பாடத்திட்டத்தைப் பின்பற்றிவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக GCE (O/L) & GCE (A/L) Tamil Language  அடை டுயபெரயபந தேர்வுகளிலும் சிறந்தபெறுபேறுகளைப் பெற்றுவருகின்றனர்.
 
பிரான்சுதமிழர்கல்விமேம்பாட்டுத் தலைமையகத்திலிருந்துஅதன் மேலாளர் திருமதி நகுலா அரியரத்தினம்  அவர்களும்செயற்பாட்டாளர்கள் திருமதிவிஜயா செல்வநாயகம், திருமதி ரேணுகாமுருகானந்தம் ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர்.

அனைத்துப் பள்ளிநிர்வாகிகளும் பணியாளர்களும் இயல்பாகதமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையுடன் கைகோர்த்துச் செயல்ப்பட்டனர். செயலமர்வுநிறைவில்,கலந்துகொண்டஆசிரியர்களுக்குசான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாலை 5.15 மணியளவில்நிகழ்வு இனிதேநிறைவடைந்தது

நன்றி! 
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை(ஐக்கியராச்சியக்கிளை)