18 வயதில் பல்கலைக்கழக பேராசிரியர்!

புதன் பெப்ரவரி 08, 2017

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் 18 வயதான மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ என்ற இளைஞர், இணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

ஹாங்காங் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ, தன் சிறு வயது முதலே புத்திக்கூர்மை உடையவராக திகழ்ந்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு தனது 9 வயதிலேயே கணிதத்தில் முதல் தர நிலை மற்றும், புள்ளியியலில் இரண்டாம் தர நிலைகளைக் கடந்து கல்வியியலுக்கான பொதுப் படிப்பை இங்கிலாந்தில் முடித்துள்ளார். பொதுவாக மாணவர்கள் 17 வயதில்தான் இதற்கான நுழைவுத் தேர்வுகளையே எழுதுவார்கள் என்பது வியப்புக்குறியது.

பின்னர், அதே ஆண்டில் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 4 ஆண்டுகளில் முதுகலை படிப்புடன் வெளியே வந்த மார்ச் டியான், அமெரிக்கா சென்று சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் வேலையில் சேர்ந்திருக்கிறார். 

மார்ச்சின் அண்ணன் ஹொராசியோ, புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 14 வயதில் படிக்க ஆரம்பித்தார். இவரது தந்தையும் தொடக்கக் கல்வி பயிலும் வயதிலேயே உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை மேதை என்று அழைப்பதை  விரும்பவில்லை எனவும். தான் எந்தக் கஷ்டமும் இல்லாமல் இயல்பாகவே படித்து முடித்திருப்பதாகவும் மார்ச் டியான் எளிமையாக தெரிவித்துள்ளா