188 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

செவ்வாய் நவம்பர் 24, 2020

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 188 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதன்படி, இன்று அதிகாலை 12.45 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 50 பேர் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில், கட்டாரி லிருந்து 48 பேர் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலை யத்தை வந்த டைந்தனர்.

இன்று அதிகாலை 5.25 மணியளவில் தோஹாவிலிருந்து 90 பேர் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்த டைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாக கட்டு நாயக்க விமானநிலையத்திலுள்ள செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.