19 ஆவது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படுமாம்!

வியாழன் டிசம்பர் 06, 2018

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியின் கீழ் 19வது அரசியலமைப்பில் திருத்தம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். 

இன்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளம் மற்றும் ஊடக மத்திய நிலையத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று(5)  இடம்பெற்றுள்ளது. 

பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அந்தக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.