2000 ரூபாய்தாள் காசு வடிவில் அழைப்பிதழ்

ஒக்டோபர் 10, 2017

கர்நாடக மாநிலத்தில் பேட்மிண்டன் அரங்க திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை 2000 ரூபாய் வடிவில் அமைத்து அதில் மோடியின் படத்தை அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பொம்மனஹள்ளி தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சதீஸ்ரெட்டி. இவர் தனது தொகுதியில் கட்டப்பட்டுள்ள பேட்மிண்டன் அரங்கத்தின் திறப்பு விழா அழைப்பிதழை 2000 ரூபாய் நோட்டை போல் வடிவமைத்துள்ளார்.

அதில் காந்தியின் படத்திற்கு பதிலாக மோடியின் படத்தை வைத்து உள்ளார். முன் பக்கத்தில் மோடியின் படம், விழா நடைபெறும் இடம், நேரம் மற்றும் விருந்தினர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. பின் பக்கத்தில் பொம்மனஹள்ளி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பட்டியலும், மோடியின் திட்டங்களும் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் அதில் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்த வித்தியாசமான அழைப்பிதழ் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் February 20, 2018

தமிழ்நாடு முதலமைச்சர் 22.02.2018 அன்று கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்ட பரிசீலனைக்கான காவிரி உரிமை மீட்புக் குழுவின் கருத்துகள்