2016 ஆம் ஆண்டு 122 ஊடகவியலாளர்களை காவுகொண்டது!

January 01, 2017

2016ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 122 ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளனர் என பத்திரிகையாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 93 ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் விபத்துக்கள் மற்றும் இயற்கைச் சீற்றங்களில் சிக்கிப் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தர வரிசையில் ஈராக்கிலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உலகத்தில் 23 நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலை, குண்டுவீச்சுத் தாக்குதல், போரின்போது நடந்த தாக்குதல் என குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆசியா, ஆபிரிக்கா, பசுபிக், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டு குறைந்தளவிலேயே ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2015ஆண்டில் 112 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 2016ஆம் ஆண்டு 93 ஊடகவியலாளர்களே படுகொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
புதன் March 21, 2018

 பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்காக லிபியா முன்னாள் அதிபர் கடாபியிடம் நிதியுதவி பெற்ற குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியிடம் இரண்டாவது நாளாக இன்றும் காவல் துறையினர்  விசாரித்தனர்.