2018 இல் உத்வேகத்துடன் பயணிப்போம் : பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Monday January 01, 2018

உலகில் வாழும் 10 கோடி தமிழன் அடிபட்டு, துன்புற்று, அலைந்தோடி, கண்ணீர் சிந்தி கேட்பார் அற்ற நிலையில்வன்முறைக்கு உட்பட்ட நிலையிலும், அநியாயமாக தமிழர் உயிர்கள் பறிக்கப்பட்டபோது அக்காலச் சூழ் நிலையில் இனப்பற்றுக்கொண்ட ஒரு புரட்சி வீரனாக ஆயுதமேந்தி, வீழ்ந்துவிடாத தமிழர் படையாக அணிதிரண்டு ஓயாத புயலாகத்தமிழன் பகையை சுழன்றடித்து மலையக நிமிர்ந்த வரலாற்று அதிசயத்தைக் கண்முன்னே நிறுத்திய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழியில், அவரின் உள்ளத்தே உதித்த சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து உழைத்து வரும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, அதன் 13 இற்கு மேற்பட்ட உபகட்டமைப்புகளுடன் தொடர்ந்தும் தனது மக்களுக்காகவும், தேச விடுதலைக்காகவும், பிறக்கும் 2018ம் ஆண்டில் இன்னும் புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் பிரான்சு வாழ் எம்தேச மக்களின் பங்கிணைவோடு பயணிக்கும் என்பதை புதிய ஆண்டில் தெரிவித்துக்கொள்கின்றோம்.