2018 தேர்தல் வாக்காளர் இடாப்பு மேன்முறையீடு செய்யலாம்!

வெள்ளி ஓகஸ்ட் 10, 2018

2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் இருந்தால்  இன்று முதல் தெரிவிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள், கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள்  மற்றும் தபால் அலுவலகங்களில் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

 அவற்றில் பெயர் அல்லது முகவரி போன்ற விடய்ஙகள் உள்ளடக்கப்படவில்லை என்றாலோ அல்லது சரியான  தகவல் இல்லை என்றாலோ அது சம்பந்தமாக மேன்முறையீடு செய்யலாம் என்று தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

 திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு ஒக்ரோபர்  மாதம் 05 ஆம் திகதி உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.