2020 ஐபோன் 5ஜி வேரியண்ட் விலை விவரம்!

ஞாயிறு டிசம்பர் 15, 2019

அப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் 5ஜி வேரியண்ட் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.அப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு நான்கு புதிய ஐபோன்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் நான்கு மாடல்களிலும் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இவற்றுடன் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் அப்பிள் நிறுவனம் புதிய 2020 ஐபோன்களின் விலையை அதிக உயர்த்தாது என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு நான்கு 5ஜி ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என அப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 

ஐபோன்களில் 5ஜி சார்ந்த உபகரணங்கள் சாதனத்தின் விலையை உயர்த்த காரணமாக அமையும் என்ற நிலையிலும், புதிய ஐபோன் மாடல்களின் விலை அதிகளவு உயர்த்தப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 5ஜி உபகரங்கள் புதிய ஐபோன்களின் விலை 30 முதல் 100 டாலர்கள் வரை விலை உயர்வுக்கு வழிவகை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

ஐபோன்11

 


புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக பேட்டரி பாதுகாப்பு மாட்யூல் ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போதைய மற்றும் பழைய ஐபோன்களில் பயன்படுத்தப்படுவதை விட 50 சதவீதம் சிறிய மற்றும் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

அளவு குறையும் பட்சத்தில் பேட்டரி திறனும் அதிகரிக்கப்படலாம். அடுத்த ஆண்டு அப்பிள் அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன்கள் 5.4 இன்ச், இரண்டு 6.1 இன்ச் மற்றும் 5ஜி வசதி கொண்ட மாடல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.