20ஆவது திருத்தம் தொடர்பில் குழு நியமனம்

செவ்வாய் செப்டம்பர் 22, 2020

அரசியலமைப்பின்  20ஆவது திருத்தம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி குழுவொன்றை நியமித்துள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் குறித்த குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, கபீர் ஹாசிம், மனோ கணேசன், எரான் விக்ரமரத்ன, இம்தியாஸ் பாகீர் மாக்கார், லக்ஷமன் கிரியெல்ல, ஹர்ஷ டி சில்வா, ரஞ்சித் மத்துமா பண்டார, சட்டத்தரணி சுரேந்திர பெர்ணான்டோ, சட்டத்தரணி ஷிரால் லக்திலக - ஆகியோர் குறித்த குழுவின் உறுப்பினர்களாக செயற்படுவார்கள்.