20வது திருத்தம் மூலம் ஜனநாயகத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்து

திங்கள் செப்டம்பர் 21, 2020

20வது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச நியமித்த குழு தனது அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சிதலைவர்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைதெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் நியமித்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்தே 20வது திருத்தம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் காரணமாக ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாராதூரமான ஆபத்து குறித்துஐக்கிய மக்கள் சக்தி கவனத்தை செலுத்தியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தில் காணப்பட்ட ஜனநாயக மனிதாபிமான தன்மை 20வது திருத்தத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 20வது திருத்தத்தை தோற்கடிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்தது 19வது திருத்தத்தை மாற்றங்களுடன் தக்கவைக்கவேண்டும் என வேண்டுகோள்விடுத்தது எனஅவர் தெரிவித்துள்ளார்.