20வது திருத்தத்தின் நகல்வடிவை அரசாங்கம் மீளாப்பெறாது

வியாழன் செப்டம்பர் 17, 2020

 20வது திருத்தத்தின் நகல்வடிவை அரசாங்கம் விலக்கிக்கொள்ளாது ஆனால் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர்.

20வது திருத்த நகல்வடிவை மீளாய்வு குழு சமர்ப்பித்த அறிக்கை அமைச்சரவையில் ஆராயப்படவில்லைஎன சுட்டிக்காட்டியுள்ள ஊடகவியலாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல

குறிப்பிட்ட அறிக்கை குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

நகல்வடிவிற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சர்கள்தற்போது அது குறித்து ஏன் குற்றம்சாட்டுகின்றனர் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியவேளை பிரதமர் நியமித்த குழு அரசமைப்பிற்குள் உள்ள அனைத்து அரசியல் விடயங்களையும் ஆராய்ந்து அவற்றை திருத்துவதற்கான பரிந்துரைகளைமுன்வைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டங்களை உருவாக்கும் விடயத்தில் முன்னைய அரசாங்கம் போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றதுஎன ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதற்கு பதிலளித்துள்ள இணை பேச்சாளர் ரமேஸ் பத்திரன அமைச்சரவைக்கு தெரியப்படுத்திய பின்னரே வர்த்தமானி அறிவித்தல்வெளியானது அதன் பின்னர் பொதுவெளியிலிருந்து பல விடயங்கள் எழுந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் ஆனால் நகல்வடிவை அரசாங்கம் விலக்கிக்கொள்ளாது எனவும் ரமேஸ்பத்திரன தெரிவித்துள்ளார்.

உத்தேச 20வது திருத்தத்தினை எப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது என்பது குறித்த முடிவு கட்சிதலைவர்களின் அடுத்த சந்திப்பில் எடுக்கப்படும் என ரமேஸ்பத்திரன தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தினை உருவாக்கியது யார் என்ற கரிசனைகள் குறித்து பதிலளித்துள்ள ரமேஸ் பத்திரன ஜனாதிபதி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் , நகல்வடிவிற்கு அமைச்சர்களே பொறுப்பு என தெரிவித்துள்ளார்.