20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் பிளவு

திங்கள் செப்டம்பர் 21, 2020

 20வது திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்குள் பிளவு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் ருவான் விஜயவர்த்தன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் தேவையற்றது என தெரிவித்துள்ள ருவான் விஜயவர்த்தன நாங்கள் நாட்டில் ஜனநாயகத்தை மீள நிலைநாட்டவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை எடுத்து நாடாளுமன்றத்தின் கரங்களில் கொடுப்பதற்காகவும் 19வது திருத்தத்தை அறிமுகப்படுத்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 20வது திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தை நோக்கி மீண்டும் செல்வதன் காரணமாக முழு விடயத்தையும் பின்னோக்கிநகர்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சரியான விடயம் என நான் கருதவில்லை அரசாங்கத்துக்குள்ளேயே 20வது திருத்தம் தொடர்பில் பிளவுஏற்பட்டுள்ளது என நான்கருதுகின்றேன் எனவும் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தை கொண்டுவருவதற்;கான சரியான தருணமிது என நான் கருதவில்லை ,ஒரு நபரை அடிப்படையாக வைத்து நிறைவேற்று அதிகாரத்தை கொண்டுவருவதற்கான பொருத்தமான தருணமிது எனவும் நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து தீர்மானிக்கவேண்டியது ஐக்கியமக்கள் சக்தியே எனவும் தெரிவித்துள்ள ருவான் விஜயவர்த்தன நான் அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராகயிருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளைமேற்கொண்டு வருகின்றேன், அவர்கள் நாங்கள் ஒரு கட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என கருதுகின்றனர் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.

எவரும் தனிநபர் குறித்து சிந்திக்ககூடாது , நாங்கள் தற்போது நாட்டின் நிலை குறித்து சிந்திக்கவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.