20வது திருத்தத்தினால் ஜனநாயகத்துக்கு பாரதூரமான ஆபத்து

வெள்ளி செப்டம்பர் 18, 2020

உத்தேச 20வது திருத்தம் காரணமாக ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

20வது திருத்தம் காரணமாக கருத்து சுதந்திரத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

20வது திருத்தம் 19வது திருத்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக அம்சங்கள் மற்றும் கட்டமைப்புகளை நீக்குகின்றது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்காலத்தில் சுயாதீனமாக விளங்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை ஜனாதிபதி நேரடியாக நியமிப்பதன் காரணமாக இந்தநிலை உருவாகியுள்ளது, இதுகருத்து சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்துக்கு எதிரான விடயம் எனவும் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் அவரிச் விசுவாசிகளாககாணப்படுவார்கள் சுதந்திரமானதனிநபர்களாக காணப்படமாட்டார்கள் எனவும் சுதந்திரஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு அவர்களை நியமிப்பதற்கான ,அகற்றுவதற்கான அதிகாரம் உள்ளது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேர்தல்ஆணைக்குழு சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துமா என கேள்வி எழுப்பியுள்ள சுதந்திர ஊடக இயக்கம் சுயாதீனமற்ற ஆணைக்குழு தேர்தலின் போது ஊடகங்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து ஊடகங்களுக்கான அளவுகோலை வெளியிடுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

பொதுமக்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரம் காணப்படுமா? ஊடக செயற்பாடுகள் நியாயமாக இடம்பெறுமா? எனவும் சுதந்திர ஊடக இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

உயர் பொலிஸ் அதிகாரிகளின் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக காணப்பட்டால் பொதுமக்களின்கருத்துக்கான சுதந்திரம்,கூட்டங்களை நடத்துவதற்கான- பயணிப்பதற்கான சுதந்திரம் போன்றவற்றிற்கான தடைகள் தவிர்க்க முடியாதவை எனவும் தெரிவித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம் செய்தி அறிக்கையிடலில் ஊடகங்கள் தடைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனநாயகத்திற்கான பாரதூரமான ஆபத்து கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கான பாதிப்பு சுதந்திரம் குறித்து ஊடக சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என சுதந்திர இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.